தற்போதைய செய்திகள்

இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்: 3 வீரர்கள் காயம்

ANI

ஜம்மு-காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும், தீவிரவாதி ஒருவனும் உயிரிழந்த நிலையில், மற்றொரு இடத்தில் தீவிரவாதிகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

புனித ரமலான் மாதத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்நிலையில், புல்வாமாவில் உள்ள ராணுவ முகாம் மீது நேற்றிரவு தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்கள் சுதாரித்துக் கொண்டு பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இதில் ராணுவ வீரர் ஒருவரும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்ட நிலையில், தப்பியோடிய தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல், ஷோபியான் மாவட்டத்தின் சில்லிபோரா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் கண்ணிவெடியில் சிக்கியது. இதில் ரோந்து சென்ற 3 ராணுவ வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.  

இதையடுத்து, அப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,415 கோடி டாலராக உயா்வு

பந்தன் வங்கி நிகர லாபம் சரிவு

பிரதமா் மோடி, ராகுல் காந்தி பிரசாரம்: தில்லியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

மழை மாணிக்காக பாதுகாப்பு வேலி அமைக்க ஆய்வு

அல்லேரி மலையில் சாராய வேட்டை: 800 லிட்டா் ஊறல் அழிப்பு

SCROLL FOR NEXT