தற்போதைய செய்திகள்

இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி

DIN


மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவில் 74.47 ரூபாயாக வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இதனால், இந்தியப் பங்குச் சந்தையும் பெரும் சரிவை சந்தித்தது.

அந்நிய முதலீடு குறைந்து வருவதும், கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதும்  ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணமாகும்.

கடந்த சில மாதங்களாகவே ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

அதன்படி வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் இருந்து முதலீடுகளைப் பெறுதல் உள்ளிட்ட நடவடிக்கையை ரிசர்வ் வங்கி தொடங்கியது. 

இந்நிலையில், இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத சரிவைச் சந்தித்துள்ளது. இன்று காலை வர்த்தக நேரம் துவங்கியதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவாக ரூ.74.45-க்கு வர்த்தகம் ஆகிறது. 

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 879 புள்ளிகள் சரிந்து 33,775 இல் வணிகமாகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 276 புள்ளிகள் சரிந்து 10,153 இல் வணிகமாகிறது.

நேற்றைய வர்த்தக நேர முடிவில் ரூபாய் மதிப்பு 74.21 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

SCROLL FOR NEXT