தற்போதைய செய்திகள்

ரன்வீர் ஷாவிடம் உள்ள சான்றிதழ்கள் போலியானவை: உயர்நீதிமன்றத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தகவல்

DIN


சென்னை: சிலைகள் தொடர்பாக ரன்வீர்ஷா தாக்கல் செய்த ஆவணங்கள் அதிகாரப்பூர்வமான ஆவணங்கள் இல்லை; போலியானவை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் ரன்வீர் ஷாவின் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கடந்த செப். 27 ஆம் தேதி நடத்திய அதிரடி சோதனையில், 12 ஐம்பொன் சிலைகள், 22 தூண்கள், கற்சிலைகள் என 89 சிலைகளை தோண்டி எடுத்து பறிமுதல் செய்தனர். மேலும், ரன்வீர் ஷாவின் தோழி சென்னை ராயப்பேட்டை கஸ்தூரி எஸ்டேட்டைச் சேர்ந்த கிரண்ராவ் என்பவரது வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தி, நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 23 கற்சிலைகளை தோண்டியெடுத்து பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான விசாரணைக்காக இருவருக்கும் சிலைக் கடத்தல் தடுப்பு போலீஸார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். இதனை அடுத்து இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சிலைகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ரண்வீர் ஷா மற்றும் கிரண் ராவை காவலில் எடுத்து விசாரிக்க தேவை உள்ளதாகவும், 15 நாள் அவகாசம் தேவைப்படுவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கூறினர். 

சிலைகள் தொடர்பாக ரன்வீர்ஷா தாக்கல் செய்த ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவை இல்லை; போலியானவை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்தார்.

இதையடுத்து சிலைகள் குறித்த ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவின் ஆவணங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இந்தியாவில் பழமையான சிலைகளை விற்க காட்சியகங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சிலைகளை வாங்கியது தொடர்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவுக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 23-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது. மேலும் ஜாமீன் மீதான மனுவில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT