தற்போதைய செய்திகள்

காவேரி பாலத்தின் தென்கிழக்கு பகுதியில் திடீர் பள்ளம்: போக்குவரத்துக்கு தடை

DIN

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே செட்டிமண்டபம் காவிரி ஆற்று பாலத்தின் தென்கிழக்கு பகுதியில் திடீரென பாலம் உள்வாங்கியதால், அந்த பகுதியில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

கும்பகோணம் செட்டி மண்டபம் புறவழிச்சாலையிலுள்ள காவேரி பாலத்தின் தென்கிழக்கு பகுதியில் திடீரென பாலம் உள்வாங்கியதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பாலம் உள்வாங்கிய பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த 2004 -ஆம் ஆண்டு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டது. இந்த நிலையில் பாலத்தின் தென்கிழக்கு பகுதியில் பக்கவாட்டுச் சுவர் ஓரம் திடீரென பாலம் உள்வாங்கியது. இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அதிகாரிகள், உடனடியாக பாலத்தின் வழியே போக்குவரத்திற்கு தடை செய்யதனர். 

பின்னர், பாலம் உள்வாங்கிய இடங்களை ஆய்வு செய்த அதிகாரிகள், உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT