தற்போதைய செய்திகள்

நீதிமன்றங்களில் 3.30 கோடி வழக்குகள் தேக்கம்: குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை

DIN


புதுதில்லி: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 3 கோடியே 30 லட்சம் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது கவலையளிக்கிறது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். 

தில்லியில் உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கி பேசிய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், நீதியை நிலைநாட்டுவதால், நீதியை நிலைநாட்டுவதில் இந்திய நீதித்துறை உலகம் முழுவதும் மதிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

எனினும், பெரும்பாலான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் 3 கோடியே 3 லட்சம் வழக்குகள் தேங்கி உள்ளதாகவும், இதில் 2.84 கோடி வழக்குகள் கீழ் நீதிமன்றங்கங்களிலும், 43 லட்சம் வழக்குகள் உயர் நீதிமன்றங்களிலும், 58 ஆயிரம் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றை விரைந்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என வேதனையுடன் தெரிவித்தார். 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பேசுகையில், இளம் வழக்குரைஞர்கள் நன்கு சட்டம் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள்; எனவே நீதிமன்றங்களில் வாதாட இளம் வழக்குரைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தற்போதுள்ள மூத்த வழக்குரைஞர்கள் இளையோருக்கு வழிவிட வேண்டும் என தீபக் மிஸ்ரா கூறினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT