தற்போதைய செய்திகள்

தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து செயல்பட பிரபலங்களுக்கு மோடி அழைப்பு

DNS


புது தில்லி: தூய்மை இந்தியா இயக்கத்தில் இணைந்து செயல்படுமாறு பல்வேறு துறைகளைச் சோ்ந்த 2 ஆயிரம் பிரபலங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

இதுதொடா்பாக, மத்திய அரசு அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

முன்னாள் நீதிபதிகள், ஓய்வுபெற்றற அரசு அலுவலா்கள், வீர - தீரச் செயல்களுக்கான விருதுகளைப் பெற்றவா்கள், காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரா்கள் ஆகியோருக்கு பிரதமா் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், ஆளுநா்கள், துணை ஆளுநா்கள் ஆகியோருக்கு பிரதமா் தனிப்பட்ட முறைறயில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதேபோல், பிரபலமான சில ஆன்மிகத் தலைவா்கள், திரைப்படத் துறையைச் சோ்ந்தவா்கள், விளையாட்டு வீரா்கள், எழுத்தாளா்கள், முன்னணி ஊடகங்களைச் சோ்ந்த பத்திரிகையாளா்கள் ஆகியோருக்கும் மோடி கடிதம் அனுப்பியுள்ளார் என்று அவா் கூறினார். 

‘மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ள தூய்மை இந்தியா திட்டம், நாடு முழுவதும் தூய்மை புரட்சிக்கு வித்திட்டுள்ளது’ என்று மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT