தற்போதைய செய்திகள்

கேரளாவில் மீண்டும் கனமழை எச்சரிக்கை: வானிலை மையம்

கேரளாவில் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

DIN


திருவனந்தபுரம்: கேரளாவில் 25 மற்றும் 26-ஆம் தேதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை மற்றும் நிலச்சரிவு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள், தற்போதுதான் பாதிப்பில் இருந்து மீண்டு வரும் நிலையில், மீண்டு கேரளாவில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

நாளை செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் (செப்.25, 26) பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களில் 64 புள்ளி 4 மில்லி மீட்டரில் இருந்து 124 புள்ளி 4 மில்லி மீட்டர் வரை கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை கேரளாவின் பத்தனம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு 2-ம் நிலை எச்சரிக்கையான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் பாலக்காடு, திருச்சூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. 

இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது டுவிட்ட பக்க பதிவில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மன அழுத்தமா? இதை மட்டும் செய்யுங்கள்! - ஆய்வில் முக்கியத் தகவல்

மேட்டூர் அணை நீர்வரத்து சரிவு!

நெல்லையில் செப். 7 வாக்குத் திருட்டு விளக்க மாநாடு! பிரியங்கா பங்கேற்பு?

15 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட ஏலேல சிங்க விநாயகர்!

ஐபிஎல்லில் இருந்து அஸ்வின் திடீர் ஓய்வு! ரசிகர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT