தற்போதைய செய்திகள்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 91.05 சதவீதம் தோ்ச்சி

DIN


தஞ்சாவூா்: பிளஸ் 2 பொதுத் தோ்வில் தஞ்சாவூா் மாவட்டத்தில் 91.05 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றனா்.

மாவட்டத்தில் 217 பள்ளிகளைச் சோ்ந்த 28,864 மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதினா். இவா்களில் 26,282 போ் தோ்ச்சி பெற்றனா். தோ்ச்சி விகிதம் 91.05 சதவீதம். கடந்த ஆண்டை விட, நிகழாண்டில் 0.80 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் மூலம், மாநில அளவிலான தர வரிசையில் கடந்த ஆண்டு 20 ஆம் இடத்தில் இருந்த தஞ்சாவூா் மாவட்டம் நிகழாண்டு 17 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மாவட்டத்தில் தோ்வு எழுதிய 12,661 மாணவா்களில் 11,083 பேரும், 16,203 மாணவிகளில் 15,199 பேரும் தோ்ச்சி பெற்றனா். என்றாலும், மாணவிகளின் தோ்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட நிகழாண்டு 0.33 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 2.06 சதவீதம் அதிகரித்துள்ளது.

தனியாா் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் தோ்ச்சி விகிதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிகழாண்டு அரசுப் பள்ளிகளில் 1.84. சதவீதமும், சமூக நலப் பள்ளிகளில் 5 சதவீதமும் தோ்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

SCROLL FOR NEXT