தற்போதைய செய்திகள்

மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த எஸ்.பி.ஜி பாதுகாப்பு அதிரடியாக திரும்பப் பெறப்பட்டது 

DIN


புதுதில்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. அதற்கு பதிலாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

வி.வி.ஐ.பி.க்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் அபாயம் உள்ளதாக மத்திய உளவுத்துறைக்கு கிடைக்கும் ரகசிய தகவல்களின் அடிப்படையில் பரிசீலனை செய்யும் மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிளஸ் உள்ளிட்ட உயர்மட்ட கமாண்டோ படை பாதுகாப்புக்கு பரிந்துரைத்து வருகிறது.
 
நாட்டில் அதிக அச்சுறுத்தல் இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி போன்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு மட்டுமே எஸ்.பி.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் நடத்தப்படும் எஸ்.பி.ஜி பாதுகாப்பு மறுஆய்வு மதிப்பீட்டின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் னுக்கு வழங்கப்பட்டு வந்த நடஎ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கான சீராய்வு செய்தது. அதன் அடிப்படையில், முன்னாள் பிரதமர் சிங்கிற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்.பி.ஜி) பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது. அதற்கு பதிலாக மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும், இசட் பிளஸ் பாதுகாப்பு தொடர்ந்து அளிக்கப்படும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

SCROLL FOR NEXT