தற்போதைய செய்திகள்

குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு:  சுற்றுலா பயணிகள்  குளிக்க தடை 

DIN


பொள்ளாச்சி: கோவை மாவட்டம் ,பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு அணை அருகே உள்ளது குரங்கு நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்து செல்வார்கள். இந்த ஆண்டு குரங்கு அருவியை சுற்றியுள்ள வால்பாறை, சக்தி எஸ்டேட் மற்றும் பொள்ளாச்சி வனச்சரக பகுதிகளில் பருவமழை பெய்ததால் குரங்கு நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து இருந்து வந்தது. சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவில் இருந்து குரங்கு நீர்வீழ்ச்சியை சுற்றிய பகுதிகளில் மழை பெய்து வருவதால் சனிக்கிழமை காலை முதல் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் .குரங்கு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறையும் வரை சுற்றுலா பயணிகளை அனுமதிக்க தடை விதித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரத்தில் இடி மின்னலுடன் கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

SCROLL FOR NEXT