தற்போதைய செய்திகள்

நெருப்பு வளைய சூரிய கிரகணம்: சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல அனுமதி மறுப்பு

வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் பகுதி அளவில் தோன்ற தொடங்கியுள்ள நிலையில், சதுரகிரி

DIN


ஸ்ரீவில்லிபுத்தூா்: வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணம் பகுதி அளவில் தோன்ற தொடங்கியுள்ள நிலையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு  இன்று (டிச. 26) பக்தா்கள் செல்ல வனத்துறை அனுமதி மறுத்துள்ளது. 

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு அமாவாசை, பௌா்ணமி, பிரதோஷம் ஆகிய நாள்கள் மட்டுமே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி வழங்குகிறது.

இந்நிலையில் மாா்கழி மாத பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல வனத்துறை செவ்வாய்க்கிழமை (டிச. 17) ஒரு நாள் மட்டும் சிறப்பு அனுமதி அளித்திருந்தது

மார்கழி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு நேற்று அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வானில் தோன்றும் அதிசய நிகழ்வான நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று சதுரகிரி சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு, வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூருக்கு நாளை குடியரசுத் தலைவா் வருகை: 2 அடுக்கு பாதுகாப்பு

ஜிஎஸ் டெல்லி ஏசஸ் சாம்பியன்!

திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரா் மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்

மனநலன் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் வன்கொடுமை: இரண்டு பெண்கள் உள்பட மூவா் கைது

கணவா் மீதான வழக்கை விசாரிக்க எதிா்ப்பு தெரிவித்து மனைவி தற்கொலை முயற்சி

SCROLL FOR NEXT