தற்போதைய செய்திகள்

அமெரிக்கா வரலாற்றிலேயே நீண்ட காலம் எம்.பி.யாக பணியாற்றிய ஜான் டிங்கெல் மறைவு

DIN


வாஷிங்டன்: அமெரிக்க வரலாற்றிலேயே நீண்ட காலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த ஜான் டிங்கெல்(92) வயது மூப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவுக்கு அதிபர் டிரம்ப் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜான் டிங்கெல். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த இவர் முதன் முதலில் 1955 ஆம் ஆண்டு பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் தொடர்ந்து 59 ஆண்டுகள் பாராளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பாராளுமன்றத்தில் சிங்கம் என கர்ஜித்த அவர், மக்களின் வாழ்க்கை மேம்பட ஒரு அன்பான மகனாகவும், தந்தையாகவும், கணவனாகவும், தாத்தாவாகவும் மற்றும் நண்பனாகவும் தனது வாழ்வின் அர்ப்பணிப்பு மிச்சிகன் மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றவை. இவர் குறிப்பிடத்தக்க சுகாதார திட்டங்கள் மற்றும் பல முக்கிய தாராளவாத சட்டங்கள் கொண்டு வருவதற்கு உந்துசக்தியாக இருந்துள்ளார்.  

1955 முதல் 2015 வரை 59 ஆண்டுகள் 11 அதிபர்களுடன் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து வந்தவர் தனது ஓய்வுக்கு பின்னரும், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

"மக்களின் ஆதரவுடன் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஜான் டிங்கெல்" "ஓய்வில்லா வழக்குரைஞர்" என்று ஸ்டென்னி ஹோயர் பாராட்டியுள்ளார். சுத்தமான காற்று, தூய்மையான நீர், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் நிதி விதிமுறைகளுக்கு எதிராக போராடியுள்ளார். 
ஏறக்குறைய 58 ஆண்டுகளாக எரிசக்தி மற்றும் வர்த்தக குழுவில் பணிபுரிந்துள்ளார். 15 வருடங்களுக்கும் மேலாக பாராளுமன்ற குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார். 

இளமைப்பருவத்திலே அரசியலுக்கு வந்து அமெரிக்க வரலாற்றின் மிகச் சிறந்த உறுப்பினர்களில் ஒருவரான டிங்கெல், வயது மூப்பு சார்ந்த உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் மிச்சிகனின் டியர்பார்ன் நகரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். 

அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வெள்ளை மாளிகை மற்றும் அனைத்து அரசுத்துறை கட்டிடங்கள், ராணுவ கட்டிடங்களில் தேசியக்கொடியை அரைக்கம்பத்திற்கு பறக்க விடும்படி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். பாராளுமன்றத்தில் மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

ஜான் டிங்கெல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவரது மனைவி டெப்பி டிங்கெல் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் டிங்கெல் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், சமீபத்தில் பாராளுமன்ற கூட்டு அமர்வில் டிரம்ப் உரையாற்றியபோது, டெப்பி டிங்கெல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT