தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை 

DIN


இந்தோனேசியாவில் நேரிட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள், வீடுகள் பலமாக குலுங்கின. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசியாவின் வடகிழக்கில் உள்ள சுலவேசி தீவுக் கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று பூமிக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.9 புள்ளியாக பதிவாகி உள்ளன என  இந்தோனேசிய புவி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கடந்த 2018ஆம் ஆண்டில் சுலேவேசி தீவில் உள்ள பலு பகுதியில் 7.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியை சுனாமி அலைகள் தாக்கின. இந்த இயற்கை சீற்றத்தில் சுமார் 2,200 பேர் உயிரிழந்தனர். 

கடந்த 2004ஆம் ஆண்டில் ஆசக் மாகாணத்தில் 9.1 ரிக்டர் அளவில் பூகம்பம் தாக்கியது. இதையடுத்து கடலில் மிகப்பெரிய சுனாமி அலைகள் உருவாகி, இந்தோனேசியாவை தாக்கின. இதில் சுமார் 1,70,000 பேர் மரணித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT