தற்போதைய செய்திகள்

ஈரானில் சிறைபிடித்துள்ள 18 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: மத்திய அமைச்சர் ஜெயசங்கர்

DIN


ஈரானில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 18 இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். 

பாரசீக வளைகுடாவின் ஹோர்முஸ் ஜலசந்தியில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் சிறைபிடித்து வைத்துள்ளனர். இந்த கப்பலில் 18 இந்தியர்கள் உள்பட 23 மாலுமிகள் சிக்கி உள்ளனர். இந்திய மாலுமிகளில் 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
 
இதையடுத்து அவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ஹேர்முஸ் ஜலசந்தியில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இந்திய மாலுமிகள் சிக்கியிருக்கும் தகவலை அறிந்தேன். அதில் 4 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள். இதில் மலப்புரம் மாவட்டம் வண்டூரை சேர்ந்த அஜ்மல் சாதிக் என்பவர் நேற்று (நேற்று முன்தினம்) குடும்பத்தினருடன் பேசியுள்ளார். அப்போது கடந்த 4 -ஆம் தேதி முதலே ஈரானிடம் சிக்கியிருப்பதாக கூறியுள்ளார்.

இந்திய மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் உங்கள் அமைச்சகம் ஈடுபட்டு இருப்பதையும் புரிந்து கொண்டுள்ளேன். இந்த மாலுமிகள் அனைவரும் விரைவில் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் அந்த நடவடிக்கை தொடர்பான தகவல்களை மாநில அரசுடன் பகிர்ந்து கொண்டால், அவற்றை நாங்கள் அந்த மாலுமிகளின் குடும்பத்தினரிடம் தெரியப்படுத்தி உதவிட வசதியாக இருக்கும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயனின் கடிதத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். அதில், இங்கிலாந்து கப்பலில் உள்ள இந்தியர்கள் 18 பேரையும் மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுகுறித்து தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் மூலம் ஈரான் அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், அடுத்தகட்ட முன்னேற்றங்கள் குறித்து நாங்கள் உங்களுக்கு தெரிவிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT