முகப்பு
தற்போதைய செய்திகள்

சத்தீஸ்கரில் வெடிகுண்டு தாக்குதல்: சிஆர்பிஎப் வீரர் பலி

சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் நக்சல்கள் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்ததில் மத்திய

Updated On : 31 ஜூலை, 2019 at 9:58 AM
பகிர்:


ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தார் மாவட்டத்தில் நக்சல்கள் மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடிக்கச் செய்ததில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர் ஒருவர் உயிரிழந்தார். 

சத்தீஸ்கர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்கும் பணியில் மாநில சிறப்பு போலீஸாருடன் சேர்ந்து சிஆர்பிஎப் போலீஸ் அதிரடிப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், பஸ்தார் மாவட்டம் டான்டேவாடாவின் போட்லி அருகே இன்று அதிகாலை 6:15 மணியளவில் 195-வது பட்டாலியனைச் சேர்ந்த ஒரு மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 
 
அப்போது, மண்ணில் புதைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை நக்சலைட்கள் வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர் ரோஷன் குமார் என்பவர் உயிரிழந்துள்ளதாக என முதற்கட்ட தகவல்கள் வெளியானது.  

Advertisement

Chhattisgarh: One Central Reserve Police Force (CRPF) personnel Roshan Kumar of 195 battalion lost his life in an IED (Improvised Explosive Device) blast near Bodli in Dantewada at around 06:15 am today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.