தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிர முதல்வர் ஃபட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

DIN

மும்பை:  மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் மற்றும் துணை முதல்வராக பதவியேற்றுள்ள என்சிபியின் அஜித் பவார் ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

மகாராஷ்டிர மாநிலத்தில் அதிரடி திருப்பமாக, மாநில முதல்வராக பாஜகவைச் சேர்ந்த ஃபட்னாவிஸ் இன்று காலை மீண்டும் முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி  பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித்பவார் துணை முதல்வராக பதவியேற்றார். விரைவில் உத்தவ் தாக்கரே முதல்வராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிரத்தில் இன்று ஏற்பட்டுள்ள இந்த திடீர் திருப்பம் அம்மாநில அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலேயே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, தனது டிவிட்டர் பக்க பதிவில் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில்,  "மகாராஷ்டிராவின் முதல்வராகவும், துணை முதல்வராகவும் முறையே பதவியேற்ற  தேவேந்திர ஃபட்னாவிஸ் ஜி மற்றும் அஜித் பவார் ஜி ஆகியோருக்கு வாழ்த்துக்கள். மகாராஷ்டிர மாநிலத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள் என்று தான் நம்புகிறேன்." என்று தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா இடையே அரசு அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை இறுதி கட்டத்தை எட்டிய நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கூட்டணி அரசாங்கத்தின் முதல்வராக சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே மீது ஒருமித்த கருத்து இருப்பதாக என்சிபி தலைவர் சரத் பவார் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

288 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில்  பாஜக 105 இடங்களை வென்றது, சிவசேனா 56, என்சிபி 54 மற்றும் காங்கிரஸ் 44 இடங்களை வென்றது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதோஷ வழிபாடு

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

SCROLL FOR NEXT