தற்போதைய செய்திகள்

பரமேஸ்வர் வீடு, அலுவலகங்களில் வருவமான வரித்துறையினர் சோதனை: ரூ.4.52 கோடி பறிமுதல்

DIN


பெங்களூரு: கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் மற்றும் அவரது உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.4.52 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கர்நாடக முன்னாள் துணை முதல்வராக இருந்த ஜி.கே.பரமேஸ்வர், பதவியில் இருந்த போது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி பல கல்லூரிகளுக்கு சலுகைகள் வழங்கியதாக பாஜகவினர் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கு ஜி.கே.பரமேஸ்வர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்நிலையில், கர்நாடக முன்னாள் துணை முதல்வர் ஜி பரமேஸ்வர் மற்றும் அவரது உறவினர் வீடுகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று அதிகாலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு, தும்கூரு, சிக்மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ளிட்ட வீடு, அலுவலகங்கள் மற்றும் கல்லூரிகள் என 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. 

100-க்கும் மேற்பட்ட வருவமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ள இந்த சோதனையின் போது ரூ.4.52 கோடி மற்றும்  பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

SCROLL FOR NEXT