தற்போதைய செய்திகள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையான மந்தநிலையை எதிர்கொள்கிறது: உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை

DIN


இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி கடுமையான மந்தநிலையை எதிர்கொள்கிறது. 2019 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளது என்று உலக வங்கி அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 

ஐஎம்எஃப் எனப்படும் சர்வதேச பண நிதியத்துடனான ஆண்டுக் கூட்டத்தை முன்னிட்டு, நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த முன்னறிவிப்புக்கான அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், 2017 - 2018 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருந்த இந்திய பொருளாதார வளர்ச்சி, 2018 - 19 நிதியாண்டில் 6.9 சதவீதமாக குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டான 2019 - 2020-இல் இது மேலும் 0.9 சதவீதம் குறைந்து, 6 சதவீதமாக சரியும் நிலையை அடைந்துள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

சென்ற நிதியாண்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாக அதிகரித்து இருந்ததாகவும், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நுகர்வு மந்தமாக இருந்ததாகவும், தொழில் மற்றும் சேவைகள் வழங்கல் துறையின் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளது. 

மேலும்,  தொழில் நிறுவன வளர்ச்சி 6.9 சதவீதமாகவும், விவசாயம், சேவை துறைகளின் வளர்ச்சி 2.9 சதவீதமாகவும் மற்றும் 7.5 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த துறைகளை ஏற்பட்ட தொடர் சரிவுதான் இந்தியாவின் வளர்ச்சி சதவிகிதம் சரியவும் காரணம் என தெரிவித்துள்ளது. 

இந்தியா தொடர்ந்து ஜிஎஸ்டி, உயர் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தவறான பொருளாதார கொள்கை, அதிகபட்ச தனியார்மயமாக்கம் என்று நிறைய முடிவுகளை எடுத்து வருகிறது. இதனால் வரிசையாக இந்தியாவின் பொருளாதாரம் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டு வருகிறது. கடுமையான பொருளாதார மந்த நிலையால், இந்தியாவின் வளர்ச்சியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதேசமயம் இந்தியா தீவிரமான பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து, வரிச்சலுகைகள், கடன் வழங்கல் அதிகரிப்பு போன்று அதிரடியாக பொருளாதார சீர்திருத்தங்களை செய்தால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 2020-21 நிதியாண்டில் 6.9 சதவீதமாகவும் மற்றும் 2021-22 நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

‘ஏக் வில்லன்’.. ரித்தேஷ் தேஷ்முக்!

SCROLL FOR NEXT