தற்போதைய செய்திகள்

ரஜினி பாஜகவில் இணைய வேண்டும் என்பதே விருப்பம்: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

DIN

புதுக்கோட்டை: நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் வரவேற்பேன்; ஆனால் ரஜினி பாஜக-வில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.காதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

புதுக்கோட்டையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வாக்குப்பதிவு நடைபெறும் நாளன்று விதிமுறைகளை மீறி வசந்தகுமார் எம்.பி. நாங்குநேரி தொகுதிக்குள் வந்தது சட்டப்படி குற்றமாகும். தேர்தல் தோல்வி பயத்தால்தான் வசந்தகுமார் எம்.பி. வாக்குச்சாவடி மையத்திற்குள் செல்வதற்காக சென்றுள்ளார்.

சம்பிரதாயத்துக்காக வழக்குப்பதிவு: ஏதோ சம்பிரதாயத்துக்காக மட்டுமே போலீஸார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர். வசந்தகுமார் எந்தந்த வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்றார், எவ்வளவு பணம் விநியோகம் செய்யப்பட்டது என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறையும் தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது. போலீஸார் அவரை மீண்டும் கைது செய்து விசாரணை நடத்தவேண்டும். நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சி மகத்தான வெற்றிபெறும் என்றார்.

பாஜக-வில் சேர வேண்டும்: மேலும், நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் பாஜக-வில் இணைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் பாஜக-வில் இணைய வேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய விருப்பம். அதுபோல, ரஜினியும் பாஜக-வில் இணைய வேண்டும். அதற்காக முயற்சியை பாஜக இதுவரை செய்யவில்லை. டாக்டர் பட்டம் பெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பஞ்சமி நிலம்: பஞ்சமி நிலம் மட்டுமல்ல அரசு நிலமாக இருந்தாலும் சரி, அதை யார் ஆக்கிரமித்திருந்தாலும் சரி, அதனை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். திமுக பலமுறை ஆட்சியிலிருந்த கட்சி என்பதால், அவர்கள் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT