தற்போதைய செய்திகள்

புத்தி சாதுர்யமிக்க புகழ்பெற்ற ஒரு வழக்குரைஞரை நாடு இழந்துவிட்டது: ராம்நாத் கோவிந்த் இரங்கல்

புத்தி சாதுர்யமிக்க புகழ்பெற்ற ஒரு வழக்குரைஞரான ராம் ஜெத்மலானியை நாடு இழந்துவிட்டது என  குடியரசுத் தலைவர் ராம்நாத்

DIN


புதுதில்லி: புத்தி சாதுர்யமிக்க புகழ்பெற்ற ஒரு வழக்குரைஞரான ராம் ஜெத்மலானியை நாடு இழந்துவிட்டது என  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பின்னர், இந்தியாவின் மும்பையில் குடியேறினார். தனது 18 வயதிலேயே மும்பை பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை முடித்து மும்பையில் வழக்குரைஞராக பணியாற்றி வந்தார். பின்னர் உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றங்களிலும் சர்ச்சைக்குரிய பல முக்கிய வழக்குகளில் ஆஜராகி வாதாடி இந்தியாவின் ஒரு முன்னணி வழக்குரைஞராக புகழ்பெற்றார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அமைச்சரவையில் சட்டத்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். 

இந்நிலையில், வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சைபெற்று வந்த ராம் ஜெத்மலானி(95) இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

லோதி சாலையில் உள்ள மயானத்தில் இன்று மாலை ராம் ஜெத்மலானியின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

இந்த நிலையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ராம் ஜெத்மலானி காலமானது மிக வருத்தமாக உள்ளது என தெரிவித்துள்ள ராம்நாத் கோவிந்த், பொதுப் பிரச்னைகள் குறித்த தனது கருத்துக்களை தனது சிறந்த வாதத் திறமையின் மூலம் வெளிப்படுத்தத் தெரிந்தவர். புத்தி சாதுர்யமிக்க புகழ்பெற்ற ஒரு வழக்குரைஞரான ராம் ஜெத்மலானியை நாடு இழந்துவிட்டது என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT