தற்போதைய செய்திகள்

தசரா திருவிழா: சிறப்பு விருந்தினராக பி.வி.சிந்துவுக்கு முதல்வர் எடியூரப்பா அழைப்பு

தசரா திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தங்க மங்கை பி.வி. சிந்துவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். 

DIN


தசரா திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள தங்க மங்கை பி.வி. சிந்துவுக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். 

உலகப் புகழ்ப் பெற்ற தசரா திருவிழா 409-ஆம் ஆண்டாக செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை  நடைபெறுகிறது.  விழாவின் இறுதிநாளான அக்டோபர் 8-ஆம் தேதி யானைகள் ஊர்வலம் இடம்பெறுகிறது. யானை அர்ஜுனா, 750 கிலோ எடைகொண்ட தங்க அம்பாரியை சுமந்துகொண்டு ஊர்வலத்தை வழிநடத்திசெல்லும். இதைப் பின்தொடர்ந்து பல யானைகள் ஊர்வலத்தில் பங்கேற்கும். இந்தக் கண்கொள்ளா காட்சியைக் காண உலகத்தின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மைசூரில் திரள்வர். 

கர்நாடக அரசு சார்பில் கர்நாடக மாநிலம், மைசூரு நகரில் நடைபெறும் இந்தத் தசரா திருவிழாவில் சிறப்பு விருந்தனராக கலந்துகொள்வதற்காக, அம்மாநில முதல்வர் எடியூரப்பா, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தங்க மங்கை பி.வி.சிந்துவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 10 மாவட்டங்களில் மழை!

புதிய விதிகள்... துபை... சரண்யா ஷெட்டி!

நிறங்கள்... அனுஷ்கா சென்!

‘மோந்தா’ புயல் ஒடிஸாவைத் தாக்கலாம்: 30 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஓய்வூதியம், காப்பீடு: தேஜஸ்வியின் தேர்தல் வாக்குறுதிகள்!

SCROLL FOR NEXT