தற்போதைய செய்திகள்

தூத்துக்குடியில் 100 பவுன் நகை கொள்ளை: காவல்துறையினர் தீவிர விசாரணை

தூத்துக்குடி தாளமுத்து நகரில் அருகில் உள்ள பெரிய செல்வம் நகரில் வசித்து வரும் துறைமுக ஊழியர் வின்செண்ட் என்பர் வீட்டில் சுமார் 100 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். 

DIN

தூத்துக்குடி தாளமுத்து நகரில் அருகில் உள்ள பெரிய செல்வம் நகரில் வசித்து வரும் துறைமுக ஊழியர் வின்செண்ட் என்பர் வீட்டில் சுமார் 100 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து - தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றர். 

தூத்துக்குடி தாளமுத்து நகரை அடுத்துள்ள பெரிய செல்வம் நகரை சேர்ந்தவர் வின்செண்ட் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஊழியரான இவர் நேற்றிரவு வழக்கமாக தனது வீட்டில் தூங்கியுள்ளார். இன்று அதிகாலை தங்களது படுக்கை அறை வெளிப்புறமாக பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கதவின் தாழ்ப்பாளை உடைத்து வெளியே வந்து மற்றொரு படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 100 பவுன் தங்கநகைகள் கொள்ளை போனது தெரியவந்தது

இதனை தொடர்ந்து தாளமுத்துநகர் காவல்நிலையத்தில் வின்செண்ட் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது வீட்டின் கதவுகள் உடைக்கப்படாமல் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.

இது தொடர்பாக தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

இங்கிருந்தால் தேவையில்லாத விமர்சனங்கள்; ஹரித்வார் செல்கிறேன்: செங்கோட்டையன்

சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

காரங்காடு படகு சவாரி ரத்து

SCROLL FOR NEXT