தற்போதைய செய்திகள்

கிருஷ்ணகிரியில் 2 இறைச்சி கடைகளுக்கு சீல் வைப்பு: 200 கிலோ இறைச்சி பறிமுதல்

DIN

கிருஷ்ணகிரியில் தடை உத்தரவை விதிகளை மீறி செயல்பட்ட 2 இறைச்சி கடைகளுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் சீல் வைத்தனர். விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 200 கிலோ இறைச்சியையும் பறிமுதல் செய்தனர். 

கிருஷ்ணகிரியில் இறைச்சிக் கடைகள் திறக்கக் கூடாது என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இறைச்சி வேண்டுவோர் இறைச்சிக் கடை உரிமையாளரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தால் அவர்களின் வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். இதற்காக கூடுதலாக சேவை கட்டணத்தை வியாபாரி பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

இத்தகைய நிலையில் கிருஷ்ணகிரி நகரில் விதிகளை மீறி இறைச்சி கடைகள் செயல்பட்டன. மேலும் அங்கு சமூக இடைவெளி பின்பற்றப்படவில்லை.

அப்போது திடீர் ஆய்வில் ஈடுபட்ட நகராட்சி ஆணையர் சந்திரா தலைமையிலான குழுவினர் 2 இறைச்சி கடைகளுக்கு சீல் வைத்தனர். மேலும், 200 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT