தற்போதைய செய்திகள்

தஞ்சாவூரில் முதன்மைச் சாலைகள் மூடல்

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ஒரு வாரத்துக்கு மேலாக வாகனப் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் முதன்மைச் சாலைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்றால் 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் பரிசோதனை முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.  

எனவே, கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி மக்கள் வெளியே வருவதைத்  தடுப்பதற்காக வண்ண அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. வண்ண அட்டைதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வெளியே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

என்றாலும், பொதுமக்கள் விதிமுறைகளைக் கடைபிடிக்காமல் அதிக அளவில் வாகனங்களில் சுற்றி வருகின்றனர். இதைத் தடுப்பதற்காக தஞ்சாவூரில் பழைய பேருந்து நிலையம், அண்ணா சிலை, காந்திஜி சாலை, ரயிலடி, சிவகங்கை பூங்கா, கீழவாசல் உள்ளிட்ட இடங்களில் முதன்மைச் சாலைகளில் இரும்புத் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் ஒரு வழிப்பாதையாக அனுமதிக்கப்பட்டன. இருப்பினும், வாகன போக்குவரத்து அதிகமாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT