வேதாரண்யம்: மோட்டர் சைக்கிளில் சென்ற இளைஞர் சுவரில் மோதி உயிரிழப்பு 
தற்போதைய செய்திகள்

வேதாரண்யம்: மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் சுவரில் மோதி உயிரிழப்பு

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இரு சக்கர மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலையோர மதில் சுவரில் மோதி நேர்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

DIN

வேதாரண்யம், ஆக.1: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே இரு சக்கர மோட்டார் சைக்கிளில் சென்ற போது சாலையோர மதில் சுவரில் மோதி நேர்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் சனிக்கிழமை உயிரிழந்தார்.

மருதூர் வடக்கு, அரியக் கவுன்டர்காடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராசு மனைவி ராஜ்குமார் (34). இவருக்கு, கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு திருமணமான நிலையில், குரவப்புலம் கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.

வழக்கம் போல, வேலை முடிந்து வெள்ளிக்கிழமை இரவு கத்தரிப்புலம் கிராமத்தில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.

கத்தரிப்புலம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் பக்கவாட்டில் இருந்த தனியார் மதில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

பலத்த காயமடைந்த ராஜ்குமார், மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தார்.

இதேபோல, இரு சக்கர மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டு நேர்ந்த மற்றொரு விபத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார்.

மருதூர் வடக்கு, ராஜாபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி கோ.குமரவேல் (வயது 48). அதே பகுதியில் உள்ள கூட்டுறவு அங்காடி அருகே நேர்ந்த விபத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவங்கள் குறித்து கரியாப்பட்டினம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

21 ரன்களில் மிகப் பெரிய சாதனையை தவறவிட்ட ஷுப்மன் கில்!

உள்ளிருந்தும் ஒளிர்கிறேன்... கமல் பதிவு!

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT