சுஷாந்த் சிங் 
தற்போதைய செய்திகள்

சுஷாந்த் சிங் மரண வழக்கு: 56 பேரின் வாக்குமூலம் பதிவு

சுஷாந்த் சிங் மரண வழக்கில் இதுவரை 56 பேர் அளித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

DIN

சுஷாந்த் சிங் மரண வழக்கில் இதுவரை 56 பேர் அளித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே தற்போது வரை 56 பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பேசிய மும்பை மாநகர ஆணையர் பரம் பீர் சிங், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இதுவரை 56 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

விசாரணை நடத்தப்பட்ட 56 நபர்களில் அவரது காதலி ரியாவும் அடங்குவார். அவரிடம் இரண்டு முறை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக பிகார் காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விசாரணையின் போது அவரது வங்கிக் கணக்கில் 18 கோடி இருந்தது. அதில் 4.5 கோடி அவரது வங்கிக் கணக்கிலேயே உள்ளது என்று கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு தேதிக்கு மாற்றலாம்!

ஒரு கப் டீ-யைவிட மொபைல் டேட்டா விலை குறைவு: பிரதமர் மோடி

கோவில்பட்டியில் வந்தே பாரத் நிற்கும் நேரம் அறிவிப்பு!

என்ன நினைவோ... ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

கடலுக்கும் வானுக்கும் இடையே... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT