மகாராஷ்டிரத்தில் புதிதாக 231 காவலர்களுக்கு கரோனா: மூவர் பலி 
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் புதிதாக 231 காவலர்களுக்கு கரோனா: 3 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்தனர்.

DIN

மும்பை: மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 231 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முன்களப் பணியாளர்களும் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.

அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் இன்றைய (செவ்வாய்க் கிழமை) நிலவரப்படி 231 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த காவல்துறையை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 7,950-ஆக உள்ளது. மேலும் 1,877-பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 3 காவலர்கள் உயிரிழந்ததால், கரோனா தொற்றால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை 107-ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் அதிக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. அங்கு 1,47,324 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 15,842 பேர் உயிரிழந்த நிலையில், 4,50,196 பேர் குணமடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

SCROLL FOR NEXT