முகப்பு
தற்போதைய செய்திகள்

ரஷியாவில் இருந்து 212 பேர் இந்தியா திரும்புகின்றனர்

ரஷியாவில் இருந்து 212 பயணிகள் இந்தியா திரும்ப இண்டிகோ நிறுவனம் விமானம் இயக்குகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:03 PM
கோப்புப்படம்
பகிர்:

ரஷியாவில் இருந்து 212 பயணிகள் இந்தியா திரும்ப இண்டிகோ நிறுவனம் விமானம் இயக்குகிறது.

இது குறித்து இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில்,

ரஷியாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் பெரும்பாலான மாணவர்களை வீட்டிற்கு அழைத்து வர இந்திய தூதரகத்தின் உதவியுடன் மாஸ்கோ - அமிர்தசரஸ் - கொச்சி வழித்தடத்தில் விமானம் இயக்குகிறோம். அந்த விமானம் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை இந்தியா வந்தடையும் என தெரிவித்துள்ளார்கள்.

கரோனா தொற்று காரணமாக மார்ச் 23 முதல் திட்டமிடப்பட்ட சர்வதேச பயணிகள் விமானங்கள் இந்தியாவில் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வந்தது.

இருப்பினும், இந்திய விமான ஒழுங்குமுறை ஆணையம் அனுமதித்த சிறப்பு சர்வதேச விமானங்கள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

தொற்றுநோய் காரணமாக இரண்டு மாத இடைவெளிக்கு பின்னர் மே 25 முதல் இந்தியாவில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை மீண்டும் தொடங்கியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.