முகப்பு
தற்போதைய செய்திகள்

அருணாச்சல பிரதேசத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா

அருணாச்சல பிரதேசத்தில் இன்று புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
அருணாச்சல பிரதேசத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா
பகிர்:

அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து மூத்த சுகாதாரத் துறை அதிகாரி கூறுகையில்,

இன்று புதிதாக 32 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 1,790 ஆக உயர்ந்துள்ளது.

இன்று தொற்று உறுதியானதில் 13 காவலர்கள் அடங்குவர்.

இதுவரை கரோனா தொற்றிற்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1,105 ஆக அதிகரித்துள்ளது. 

இதுவரை 93,365 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.