முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆண்டிபட்டி அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் திறந்து வைத்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
ஆண்டிபட்டி அருகே புதிய அங்கன்வாடி மைய கட்டடம் திறப்பு
பகிர்:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை ஆண்டிபட்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் திறந்து வைத்தார்.

ஆண்டிபட்டி அருகே உள்ள கோவில்பட்டி ஊராட்சியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடி மைய கட்டடம்  கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில் அந்த மைய கட்டடம்  சிதலமடைந்து காணப்பட்டது.

இந்நிலையில் அக்கிராம மக்கள் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜனிடம் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித்தரக் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவரது சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து புதிய கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆண்டாள், ஜெயகாந்தன், ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், மாவட்ட கவுன்சிலர் வளர்மதி மகாராஜன், ஊராட்சி மன்ற தலைவர் தங்கப்பாண்டி, திமுக இளைஞர் அணி மணி, வைகை ராஜா, ரொக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முழு கட்டுரையைப் படிக்க →