முகப்பு
தற்போதைய செய்திகள்

நாட்டில் கரோனா பாதிப்பு 19 லட்சத்தை தாண்டியது

கடந்த 24 மணிநேரத்தில் 52,509 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:04 PM
நாட்டில் கரோனா பாதிப்பு 19 லட்சத்தை தாண்டியது
பகிர்:

புதுதில்லி: கடந்த 24 மணிநேரத்தில் 52,509 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்தை தாண்டியுள்ளது.

இன்றைய (புதன்கிழமை) நிலவரப்படி கடந்த 24 மணிநேரத்தில் 857 பேர் உயிரிழந்ததால்,உயிரிழப்பு எண்ணிக்கை 39,795-ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 5,86,244 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 12,82,216 பேர் கரோனா தொற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  

நேற்று (செவ்வாய்க் கிழமை) ஒருநாளில் மட்டும் 51,706 பேர் குணமடைந்தனர். இதனால் 67.19%-ஆக குணமடைந்தோர் விகிதம் உள்ளது. சிகிச்சை பெற்று வருவோரின் விகிதம் 30.72%-ஆக உள்ளது. இறப்பு விகிதம் 2.09%-ஆக குறைந்துள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1,42,458 பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு 16,142 பேர் உயிரிழந்த நிலையில், 2,99,356 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 55,152 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 2,08,784 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,349-ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →