தற்போதைய செய்திகள்

அமராவதி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை

DIN

அமராவதி அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஏழு அடியே பாக்கி உள்ள நிலையில் அமராவதி ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையின் மொத்த உயரம் 90 அடி. அணையின் கொள்ளளவு 4065 மில்லியன் கன அடி. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து அணைக்கு தற்போது அதிகபட்சமாக 11 ஆயிரம் கன அடி வந்து கொண்டிருக்கிறது.

மேலும் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சின்னாறு,தேனாறு, பாம்பாறு ஆகிய இடங்களில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 83 அடியை எட்டி உள்ளது.

நேற்று வியாழக்கிழமை அணையிலிருந்து அமராவதி ஆற்றிலும் பிரதான கால்வாயிலும் விநாடிக்கு 2440 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் அணையின் நீர்மட்டம் தற்போது 83 அடியை தாண்டும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணை முழு கொள்ளளவை எட்ட இன்னும் ஏழு அடியே பாக்கி உள்ளது.

இந் நிலையில் அணையில் உபரி நீர் திறந்து விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து அமராவதி ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர கிராம மக்கள் பாதுகாப்பாய் இருக்குமாறு இதன் மூலம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

SCROLL FOR NEXT