பாஜக எம்.பி. சாக்ஷி மகாராஜுக்கு கொலை மிரட்டல்
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகாராஜுக்கு பாகிஸ்தான் எண்ணிலிருந்து கொலை மிரட்டல் வந்ததாக காவல்துறையில் புகார் அளித்தார்.
உன்னாவ் : பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாக்ஷி மகாராஜுக்கு பாகிஸ்தான் எண்ணிலிருந்து கொலை மிரட்டல் வந்ததாக காவல்துறையில் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, பாகிஸ்தானின் ஏதோ ஒரு பயங்கரவாத அமைப்பிலிருந்து எனக்கு இரண்டு தொலைபேசி அழைப்புகள் வந்தது.
அதில் பேசியவர், விரைவில் குண்டு வைத்து என்னை கொல்ல போவதாகவும், காஷ்மீர் விரைவில் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாற்றுவோம் என்று கூறினார்.
மேலும், உங்கள் தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதும் ஒரு கண் வைத்திருப்பதாக கூறினார்கள் என சாக்ஷி தெரிவித்தார்.
சாக்ஷி அளித்த புகாரின் பேரில், காவல் கண்காணிப்பாளர் ரோஹன் பி கனய் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்.