முகப்பு
தற்போதைய செய்திகள்

பாகிஸ்தானில் புதிதாக 531 பேருக்கு கரோனா

பாகிஸ்தானின் கடந்த 24 மணி நேரத்தில் 531 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,85,191 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:06 PM
பாகிஸ்தானில் புதிதாக 531 பேருக்கு கரோனா
பகிர்:

பாகிஸ்தான் : பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 531 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 2,85,191 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் செவ்வாயன்று தெரிவித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 15 பேர் பலியாகியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை 6,112 ஆக உயர்ந்துள்ளது. 

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 2,61,246 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், 780 பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,227 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்தம் 21,65,811 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.