தற்போதைய செய்திகள்

கோழிக்கோடு விமான விபத்து: 85 பேர் சிகிச்சையிலிருந்து வீடு திரும்பினர்

DIN

கேரளத்தில் கோழிக்கோடு விமான விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றுவந்தவர்களில் 85 பேர் மருத்துவமனையிலிருந்து இன்று (புதன்கிழமை) வீடு திரும்பினர்.

வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து 185 பயணிகள் 6 பணிப்பெண்கள், 2 விமானிகள் உட்பட 191 பேருடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்தது.

விமானம் தரையிறங்கும்போது ஓடுதளத்தில் சறுக்கி விபத்திக்குள்ளானதில் இரண்டு துண்டாக உடைந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 19 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகாமையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து அவ்வபோது குணமடைந்தவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அந்தவகையில் இன்று (புதன்கிழமை) பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 85 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இது தொடர்பாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கோழிக்கோடு விமான விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு பல்வேறு மருத்துவமனைகளில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து அறுவை சிகிச்சைகளும் முறையாக வழங்கப்படுகின்றன. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அவசரகால மருத்துவர்களும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. அந்தவகையில் சிகிச்சை முடிந்து உடல்நலம் தேறிய 85 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT