தற்போதைய செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் புதிதாக 540 பேருக்கு கரோனா பாதிப்பு

DIN

ஜம்மு- காஷ்மீரில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 540 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. அந்தவகையில் ஜம்மு காஷ்மீரில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதிதாக 540 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஜம்முவில் 119 பேரும், காஷ்மீரில் 421 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 27,489-ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை     640 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் ஜம்முவில் 204 பேரும், காஷ்மீரில் 436 பேரும் குணமடைந்தனர். இன்று (வெள்ளிக் கிழமை)
உயிரிழப்புகள் எதுவும் பதிவாகாத நிலையில், இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 520-ஆக உள்ளது இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

சிரி... சிரி...

இந்தியன் - 3 உறுதி!

நீலகிரி: மே 20 ஆம் தேதி வரை மலை ரயில் சேவை ரத்து

வீடு தேடி வந்தவள்

SCROLL FOR NEXT