முகப்பு
பழனி வழியாக திண்டுக்கல் முதல் போத்தனூர் வரையில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில்
தற்போதைய செய்திகள்

பழனி-போத்தனூர் வரை ரயில் இயக்கப்பட்டு பாதையின் தரம் சோதனை

பழனி வழியாக திண்டுக்கல் முதல் போத்தனூர் வரையிலான பாதையில் அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டு இருப்புப் பாதையின் தரம் குறித்து சோதனை செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:07 PM
பழனி வழியாக திண்டுக்கல் முதல் போத்தனூர் வரையில் அதிவேகமாக இயக்கப்பட்ட ரயில்
பகிர்:

பழனி வழியாக திண்டுக்கல் முதல் போத்தனூர் வரையிலான பாதையில் அதிவேகமாக ரயில் இயக்கப்பட்டு இருப்புப் பாதையின் தரம் குறித்து சோதனை செய்யப்பட்டது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவைகள் அனைத்தையும் மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் மீண்டும்‌ குறிப்பிட்ட பகுதிகளுக்கு ரயில் சேவைகளை துவக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ரயில் சேவை துவங்குவதால் மத்திய அரசு எப்போது அறிவித்தாலும் தயாராக இருக்கும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து பழனி வழியாக பொள்ளாச்சி, போத்தனூர் வரையுள்ள ரயில் பாதையில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.

நான்கு பெட்டிகள் கொண்ட அதிவேக ரயிலை சுமார் 80 முதல் 100 கி.மீ வேகத்தில் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில்  பாதை சரிபார்ப்பு குழுவினர் கலந்துகொண்டு ரயில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை, பாதிப்புகள் ஆகியவை குறித்து ஆராய்ந்து, அதில் உள்ள‌ குறைகளை சரி செய்ய பரிந்துரைக்கப்படும் என்று  ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த நான்கு மாதங்களாக ரயில்கள் இயக்காமல் இருக்கும் நிலையில் ரயில் பாதையில் ஏதேனும் விரிசல் மற்றும்‌ சேதமாகி உள்ளதா என்றும், ரயில் சேவை தொடங்கினால் பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் சோதனை ஓட்டம் செய்யப்பட்டது.

கடந்த மாதம் இதேபோன்று பழனி வழியாக பாலக்காடு-திண்டுக்கல் வரையுள்ள அகல ரயில்பாதையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →