சங்ககிரி நகர், தெலங்கர் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு தில்லை விநாயகருக்கு சதுர்த்தியை முன்னிட்டு சனிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.  
தற்போதைய செய்திகள்

சங்ககிரி அருள்மிகு தில்லை விநாயகர் கோவிலில் சதுர்த்தி சிறப்பு பூஜைகள்  

விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி  நகர், தெலங்கர் தெருவில் உள்ள அருள்மிகு தில்லை விநாயகர் கோவிலில் விநாயகர் சுவாமிக்கு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

DIN

சங்கிகரி: விநாயகர் சதுர்த்தியையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி  நகர், தெலங்கர் தெருவில் உள்ள அருள்மிகு தில்லை விநாயகர் கோவிலில் விநாயகர் சுவாமிக்கு சனிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

சங்ககிரி நகர்,  தெலங்கர் தெருவில் உள்ள அருள்மிகு தில்லை விநாயகர் கோவில் மிகவும் பழமை வாய்ந்ததும் மன்னர் காலத்திலேயே ஒரே கல்லால் விநாயகர் சுவாமி வடிவமைக்கப்பட்டுள்ளன. 

விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவில் வளாகத்தில் அதிகாலை கணபதி ஹோமம் செய்யப்ப்டடு அருள்மிகு தில்லை விநாயகர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்யப் பொருள்களை கொண்டும் மேலும் பல்வேறு பழ வகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. 

இதனைத்தொடர்ந்து சுவாமிக்கு அருகம்புல், வெற்றிலை மாலைகள் சாத்தப்பட்டும் பொங்கல், சுண்டல், கொழுகட்டை வைத்து படைத்து பூஜைகள் நடைபெற்றன. கரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையையொட்டி கோவில் அர்ச்சகர் மட்டுமே பூஜைகளை செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை ஆணவக் கொலை: பெண்ணின் தாய் உள்பட 4 பேர் சிறையிலடைப்பு!

ஷபானாவின் போலீஸ் போலீஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி!

டிஜிட்டல் அரெஸ்ட்: ரூ. 80 லட்சத்தை இழந்த முதியவர்! இளைஞர் கைது!!

பெரியார் பிறந்த நாள்: தவெக தலைவர் விஜய் மரியாதை!

என் தொழிலைக் கெடுக்காதீங்க... ஆவேசமான விடிவி கணேஷ்!

SCROLL FOR NEXT