தற்போதைய செய்திகள்

உலகம் முழுவதும் பாதிப்பு 2.33 கோடி: பலி 8.08 லட்சத்தைத் தாண்டியது

DIN


உலகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 8,08,695 லட்சமாக உயர்ந்தது. 

இதுகுறித்து ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிப்பதாவது: கடந்த 24 மணி நேரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி, 9  ஆயிரத்து 272 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,33,80,182 கோடியாக உயர்ந்துள்ளது. அதே கால அளவில் 752 பேர் பலியானதை அடுத்து பலியானோர் எண்ணிக்கை 8,08,695 ஆக அதிகரித்துள்ளன.

நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,59,06,254 ஆகவும், 66,65,233 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அவர்களில் 61,717 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.     

கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் இதுவரை 58,41,428    பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்க்கு பலியானவா்களின் எண்ணிக்கை 1,80,174 ஆக அதிகரித்துள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, கரோனா நோய்த்தொற்றால் பிரேஸில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 3.58 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1.14 லட்சத்துக்கும் மேற்பட்டோா் அந்த நோய் காரணமாக உயிரிழந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

ரிஷபத்துக்கு பெயர்ச்சி அடைந்தார் குருபகவான்

SCROLL FOR NEXT