முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆந்திரம் : கிருஷ்ணா ஆற்றில் குதித்து மருத்துவர் தற்கொலை

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் குதித்து மருத்துவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

Updated On : 24 ஆகஸ்ட், 2020 at 11:56 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியில் குதித்து மருத்துவர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து காவல் துணை ஆய்வாளர் கூறுகையில்,

ஞாயிற்றுக்கிழமை இரவு ஒருவர் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் அவர் குதிப்பதற்கு முன் தனது கைபேசியையும், அடையாள அட்டையையும் பாலத்தின் மேல் வைத்துவிட்டு குதித்துள்ளார்.

Advertisement

அதைக் கைப்பற்றி விசாரித்ததில், அவர் குண்டூர் மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் அடேபள்ளி ஸ்ரீனிவால் என தெரியவந்தது. அவரின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகின்றது என கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.