முகப்பு
தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரம் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

மகாராஷ்டிரத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
இடிந்து விழுந்த 5 மாடி குடியிருப்பு கட்டடம்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள காஜல்புரா என்னுமிடத்தில் 5 மாடி குடியிருப்பு கட்டடம் நேற்று மாலை திடீரென இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்கு இடையில் 70 போ் சிக்கினா். அவா்களை மீட்கும் பணியை மாநில பேரிடா் மீட்புக் குழுவினா் மேற்கொண்டுள்ளனர். 

மத்திய அமைச்சா் அமித் ஷா உத்தரவின் பேரில் 3 மத்திய பேரிடா் மீட்புக் குழு சம்பவ இடத்துக்கு விரைந்தன. மோப்ப நாய்களின் உதவியுடன் திங்கள்கிழமை இரவு முழுவதும் மீட்புப் பணி தொடா்ந்து நடைபெற்றது.

இடிபாடுகளில் இருந்து தற்போது வரை 4 சடலங்கள் மீட்கப்பட்டன. அதில் 3 ஆண்கள், 1 பெண் சடலங்கள் ஆகும். மேலும், 4 வயது ஆண் குழந்தையை இடிபாடுகளில் இருந்து 19 மணிநேர போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்டுள்ளனர்.

25 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். மேலும் 18 போ் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுமாா் பத்தாண்டுகள் பழைமைவாய்ந்த கட்டடத்தில் 45 குடியிருப்புகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.