மத்திய இணை அமைச்சரின் வலைதளத்தை கைப்பற்றிய ஊடுருவிகள்
மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியின் தனிப்பட்ட வலைத்தளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடுருவிகள் கைப்பற்றினர்.
மத்திய இணை உள்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டியின் தனிப்பட்ட வலைத்தளத்தை பாகிஸ்தானைச் சேர்ந்த ஊடுருவிகள் கைப்பற்றினர்.
ஜி கிஷன் ரெட்டியின் தனிப்பட்ட வலைத்தளத்தை (kishanreddy.com) பாகிஸ்தான் ஊடுருவிகள் சுதந்திர தினத்தன்று கைப்பற்றியுள்ளனர். பின், வலைதளத்தில் காஷ்மீர் உரிமை, பாகிஸ்தான் பற்றிய செய்திகளை பதிவிட்டனார். மேலும், இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கும் வகையிலும் செய்திகளை வெளியிட்டனர்.
இந்த சம்பவத்தை ஹைதராபாத்தில் உள்ள ஜி கிஷன் ரெட்டியின் அலுவலகம் இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், அவரது வலைதளத்தை தற்காலிகமாக இந்திய அரசு முடக்கியுள்ளது. கைப்பற்றியவர்கள் குறித்த தகவல்கள் தெரியாததால் பொது மக்களிடம் கூறவில்லை என தெரிவித்தனர்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இந்த வலைதளத்தில் பொது மக்கள் அல்லது அரசின் எந்த முக்கிய தகவலும் இல்லை. வலைதளத்தில் அமைச்சரின் பொது நடவடிக்கைகள் மற்றும் அரசியல் திட்டங்கள் உள்ளிட்டவை தான் பதிவு செய்யப்பட்டிருந்தது என தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.