பஞ்சாபில் அமைச்சர் மற்றும் 2 எம்.எல்.ஏ.-களுக்கு கரோனா
பஞ்சாப் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் சுந்தர் ஷாம் அரோரா மற்றும் 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பஞ்சாப் மாநில தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் சுந்தர் ஷாம் அரோரா மற்றும் 2 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து அமைச்சர் அரோரா சுட்டுரை மூலம் கூறுகையில்,
நான் கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று இருப்பது உறுதியகியுள்ளது. சட்டீஸ்கரில் உள்ள இல்லத்தில் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கடந்த சில நாட்களாக என்னை சந்தித்த அனைவரைம் கரோனா பரிசோதனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். தற்போது எனக்கு உடல் ரீதியான பிரச்சினை எதுவும் இல்லை என்று கூறினார்.
மேலும், பாட்டியாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்தியால் சிங் கம்போஜ் மற்றும் ஹரிந்தர் பால் சிங் சந்துமாஜ்ரா ஆகிய இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.
ஆகஸ்ட் 28 அன்று நடக்க இருக்கும் ஒரு நாள் சட்டசபை கூட்டத்திற்கு வரும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கரோனா பரிசோதனை செய்து பரிசோதனை முடிவுகளை பெற சட்டபேரவை தலைவர் ராணா கே.பி. சிங் உத்தரவிட்டார்.
சட்டபேரவை தலைவர் அறிவிப்பை அடுத்த பரிசோதனை செய்ததில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.