ராஜஸ்தான் மருத்துவமனையில் 9 குழந்தைகள் பலி: விசாரணைக் குழு அமைப்பு
ராஜஸ்தான் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறித்து விசாரிக்க அம்மாநில சுகாதாரத் துறை 4 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
ராஜஸ்தான் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறித்து விசாரிக்க அம்மாநில சுகாதாரத் துறை 4 பேர் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜே.கே.லான் மருத்துவமனையில் டிசம்பர் 10 ஆம் தேதி (24 மணி நேரத்தில்) 9 கைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் மூன்று குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள் இருந்ததாகவும், மூன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் நுரையீரலுக்குள் சென்றதால் உயிரிழந்ததாகவும், எஞ்சிய மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு, மாநில சுகாதார அமைச்சகத்தின் 4 அதிகரிகள் கொண்ட விசாரணைக் குழுவை அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் அந்த விசாரணைக்குழு மூன்று நாள்களில் அவர்களது அறிக்கையை தாக்கல் செய்யும் எனவும் தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக விளங்கும் ஜே.கே. லோன் மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 100 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.