முகப்பு
கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

பிரிட்டனிலிருந்து கர்நாடகத்திற்கு வந்த 10 பேருக்கு கரோனா

பிரிட்டனிலிருந்து கர்நாடகத்திற்கு வந்த 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
கோப்புப்படம்
பகிர்:

பிரிட்டனிலிருந்து கர்நாடகத்திற்கு வந்த 10 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனில் அதிதீவிர கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்திருப்பதை அடுத்து, டிசம்பர் 22ஆம் தேதி நள்ளிரவு முதல் அந்நாட்டிலிருந்து இந்தியா வரும் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த ஞாயிறு மற்றும் திங்கள்கிழமையில் மட்டும் பிரிட்டனின் பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் 291 பயணிகள் கர்நாடகம் வந்தனர். அவர்களில் 49 பேர் கரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்கவில்லை என்பதும், ஏர் இந்தியா விமானத்தில் வந்த 246 பயணிகளில் 89 பேர் கரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் கொண்டு வரவில்லை என்பதும் தெரிய வந்தது.

மேலும், அவர்களை கண்டறிந்து கரோனா பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தற்போது மாநில சுகாதரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியதாவது,

பிரிட்டனிலிருந்து வந்த பயணிகளை பரிசோதனை செய்ததில் 10 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் மாதிரிகளை மரபணு கண்டறிவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. 

அந்த முடிவுகள் 2 நாள்களில் கிடைக்கும். அதன்பிறகு மற்ற முடிவுகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை பிரிட்டனிலிருந்து 2,500 பேர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →