முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் மேலும் 1,027 பேருக்கு கரோனா

தமிழகத்தில் புதிதாக 1,027 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் புதிதாக 1,027 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (வெள்ளிக்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,12,142 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 292 பேருக்கு, கோவை மாவட்டத்தில் 95 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement

கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 12 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 12,048 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 1,103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 7,90,965 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 9,129 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments