தற்போதைய செய்திகள்

‘கரோனா உறுதியான அனைத்து வெளிநாட்டு பயணிகளுக்கும் மரபணு பரிசோதனை’

ANI

கடந்த 14 நாள்களில் வெளிநாடுகளில் இருந்து வந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளின் மாதிரியும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் உருமாறிய அதிதீவிர கரோனா கண்டறியப்பட்டதை அடுத்து பல நாடுகள் பிரிட்டனிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது.

இதனிடையே, இந்தியாவும் பிரிட்டன் விமானங்களுக்கு தடைவிதித்து, பிரிட்டனிலிருந்து கடந்த ஒரு மாத காலத்திற்குள் வந்த பயணிகளை கண்டறிந்து கரோனா அறிகுறி உள்ளதா என கண்காணிக்க உத்தரவிட்டிருந்தது.

அவ்வாறு, கரோனாவால் பாதிக்கப்பட்ட பிரிட்டன் பயணிகளின் சளி மாதிரியை மரபணு சோதனை செய்ததில் இதுவரை இந்தியாவில் 7 பேருக்கு உருமாறிய கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், டிசம்பர் 9 முதல் 22 வரை வெளிநாடுகளில் இருந்து வந்து கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைத்து பயணிகளின் மாதிரியும் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்கா யார் பக்கம்?

இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6 - 6.5% தான், 8 - 8.5% அல்ல! -ரகுராம் ராஜன்

7 நக்சல்கள் சுட்டுக் கொலை!

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

SCROLL FOR NEXT