தற்போதைய செய்திகள்

ஆதரவற்றோர் சடலங்களை அடக்கம் செய்யும் ஓய்வுபெற்ற தலைமைக் காவலருக்குப் பாராட்டு

DIN

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அனாதை சடலங்களை நல்லடக்கம் செய்த பணி ஓய்வு பெற்ற தலைமைக் காவலரை எஸ்.பி.தெ.சண்முகப்பிரியா செவ்வாய்க்கிழமை பாராட்டினார்.

காஞ்சிபுரம் கிழக்கு ராஜவீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஓய்வு பெற்ற காவல்துறையினரின் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் பணி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. ஜி.சம்பந்தம் தலைமையில் நடைபெற்றது. பணி ஓய்வு பெற்ற டி.எஸ்.பி.க்கள் பி.தனுசு, வி.எஸ்.பன்னீர் செல்வம், பணி ஓய்வு பெற்ற ஆய்வாளர் வி.தரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க ஒருங்கிணைப்பாளர் டி.உத்தமராஜன் வரவேற்று பேசினார். பொதுக்குழு கூட்டத்தில் 75 வயதுக்கு மேற்பட்ட சங்க உறுப்பினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

காஞ்சிபுரத்தில் இதுவரை 1,323 அனாதை சடலங்களை நல்லடக்கம் செய்த பணி ஓய்வு பெற்ற தலைமைக் காவலர் ஜி.ஆர்.சீனிவாசனை காவல் கண்காணிப்பாளர் தெ.சண்முகப்பிரியா சால்வை அணிவித்து அவரது சமூக சேவைகளைப் பாராட்டினார். சங்கத்தின் துணைத் தலைவர் சி.கண்ணபிரான் நன்றி கூறினார். சங்க உறுப்பினர்கள் பலரும் திரளாக கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT