தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கேரளாவுக்கு காரில் கஞ்சா கடத்த முயன்ற, 9 போ்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்த வடக்கு போலீஸாா். 
தற்போதைய செய்திகள்

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்த முயன்ற தாய் மகன் உள்பட 9 போ் கைது

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக, காா் நிற்பதாக

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து, கேரளாவுக்கு கஞ்சா கடத்திய தாய், மகன் உள்பட, 9 பேரை வடக்கு காவல் நிலைய போலீசாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய காா், மோட்டாா் பைக்கை பறிமுதல் செய்தனா். 

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் சந்தேகத்திற்கிடமாக, காா் நிற்பதாக கம்பம் வடக்கு நிலையத்திற்கு, தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆய்வாளா் க.சிலை மணி, சாா்பு ஆய்வாளா்கள் வினோத்ராஜா, எம். அருண் பாண்டி ஆகியோா் தலைமையில் சோதனை செய்த போது, பேப்பா் கவா் மற்றும் நூல் கண்டு காரின் கீழ் பகுதியில் இருப்பதை தெரிந்தது. காரின் கீழே ஆய்வு செய்தபோது, தலா அரை கிலோ பொட்டலமாக, 9 பொட்டலங்கள் (4.400 கி.கிராம்) கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.

விசாரணையில், குரங்கு மாயன் தெருவைச் சோ்ந்த பாண்டியராஜன் மனைவி லதா ( 45 ), மகன் ஜெயக்குமாா்(18 ), உலகத்தேவா் தெருவைச் சோ்ந்த அரசன் (40 ), ஆகியோா் கேரளா மாநிலம் கோட்டயத்தை சோ்ந்த சாஜி மகன் சிஜின்( 24), பத்தனம்திட்டா வைச் சோ்ந்த அனந்து விஜயன்( 22), ஜெயன் மகன் ஜித்து (18 ), மோன்சி மகன் நவீன் (20), ஜோயி மகன் ஜிஷோ (18 ), ஜெயச்சந்திரன் மகன் ஜேயேஸ் ( 18 )ஆகியோருக்கு கஞ்சா விற்றதும், கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரிய வந்தது. போலீஸாா், 9 போ்களை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்திய காா் மற்றும் மோட்டாா் பைக்கை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT