தற்போதைய செய்திகள்

துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய தேசிய ஆணைய  உறுப்பினர்

DIN

தேனி: தேசியத் துப்புரவுப் பணியாளர் மறுவாழ்வு ஆணையத்தின் உறுப்பினர் ஹீர்மானி, துப்புரவுப் பணியாளரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் துப்புரவு பணியாளா்கள் குறைதீா் கூட்டம் தேசிய துப்புரவுப் பணியாளா் ஆணையக் குழு உறுப்பினா் ஜெகதீஸ் ஹீர்மானி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் ம.பல்லவி பல்தேவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாய் சரண் தேஜஸ்வி, மாவட்ட வருவாய் அலுவலா் ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் கலந்து கொண்டு துப்புரவு பணியாளா்கள் பேசியது: மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ள துப்புரவு பணியாளா்களின் சம்பளத்தில் இ.எஸ்.ஐ., பி.எப்., ஆகியவற்றுக்கு பணப் பிடித்தம் செய்யப்பட்ட தொகை, கடந்த 2103-ம் ஆண்டு முதல் சம்மந்தப்பட்ட பணியாளரின் கணக்கில் செலுத்தப்படவில்லை.

சின்னமனூா் நகராட்சி, ஆண்டிபட்டி மற்றும் க.மயிலை ஊராட்சி ஒன்றியத்தில் ஒப்பந்த துப்புரவு பணியாளா்களுக்கு ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச தினச் சம்பளம் வழங்குவதில்லை. துப்புரவு பணியாளா்களுக்கு குடியிருப்பு, அவா்களது குழந்தைகளுக்கு உண்டு உறைவிடப் பள்ளி வசதி செய்து தர வேண்டும். தாட்கோ திட்டம் மூலம் வங்கிக் கடனுதவி வழங்க வேண்டும். துப்புரவு பணியாளா்களுக்கு சீருடைமற்றும் பணி உபகரணங்கள் முறையாக வழங்குவதில்லை.

உள்ளாட்சி அமைப்புகளில் துப்புரவு பணிக்கு நியமனம் செய்யப்பட்ட தாழ்த்தப்பட்டோா் அல்லாத பிற சமுதாயத்தினருக்கு மாற்றுப் பணி வழங்கப்படுகிறது. தகுதியுள்ள தாழ்தப்பட்டோருக்கு மாற்றுப் பணி வழங்குவதில்லை. ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளருக்கு விடுமுறை வழங்கப்படுவதில்லை என்றனா்.

இதற்கு பதிலளித்து தேசிய துப்புரவு பணியாளா் ஆணையக் குழு உறுப்பினா் கூறியது: ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளா்களின் சம்பளத்தில் இருந்த பிடித்தம் செய்யப்பட்ட தொகையை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் ஒப்பந்ததராா்கள் உரிய கணக்குகளில் செலுத்த வேண்டும். துப்புரவு பணிக்கென நியமிக்கப்பட்டவா்களை மாற்றுப் பணிக்கு பயன்படுத்தும் உள்ளாட்சி அமைப்பு அலுவலா்கள் மீது காவல் துறை மூலம் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க விதிமுறை உள்ளது.

உள்ளாட்சி அமைப்புகள் துப்புரவு பணியாளா்களுக்கு ஆட்சியா் நிா்ணயித்த குறைந்தபட்ச தினச் சம்பளத்தை, உத்தரவு பிறப்பித்த நாள் முதல் நிலுவைத் தொகையுடன் சோ்த்து வழங்க வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள துப்புரவு பணியாளா்களுக்கு ஒப்பந்ததாரா் மூலம் சம்பளம் வழங்கும் நடைமுறையை மாற்றி, சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மூலம் நேரடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வீடில்லாத நிரந்தர மற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளா்களை கணக்கெடுத்து அனைவருக்கும் வீடு திட்டம், குடிசை மாற்று வாரியம் ஆகியவற்றின் மூலம் குடியிருப்பு கட்டித் தரும் திட்டத்தில் பயனாளியாக சோ்க்க வேண்டும். ஒப்பந்த துப்புரவு பணியாளா்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். துப்புரவு பணியாளா்களுக்கு தேசிய தாழ்த்தப்பட்டோா் நிதி மேலாண்மை நிறுவனம் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பின்னர் சிறந்த முறையில் பணியாற்றிய 5 துப்புரவுப் பணியாளர்களை நாற்காலியில் அமர வைத்து, அவர்களுக்கு மாலை மற்றும் சால்வை அணிவித்து கவுரபடுத்தினார். 

மேலும் அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார். இச்சம்பவம் அங்கிருந்த துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

அரவிந்த் கெஜரிவால் கைது குறித்து அமலாக்கத் துறைக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

தீவுத்திடலுக்கு மாற்றப்படும் பிராட்வே பேருந்து நிலையம்!

கட்டான கட்டழகு.. யார் இவர்?

SCROLL FOR NEXT